பனை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாகவும் வரலாற்றில் முதன் முறையாக பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தலைமையில், பெரிஸ் நகரில் இடம்பெற்றது. 

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பதிராஜ மற்றும் விநியோகஸ்தர்களாக நியமனம் பெற்றுள்ள டியூக் இளங்கோ, அருமைதுரை சிவராவூரன் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம மற்றும் தூதரக அதிகாரிகளும், இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.