விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரும் உயிரிழப்பு 

By T Yuwaraj

08 Sep, 2021 | 03:46 PM
image

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரும் மரணமடைந்துள்ளார்.

இன்று (08) காலை இடம்பெற்ற குறித்த  விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் கப் வாகனத்தில் பயணித்த 50 வயதான குருநாகல் பகுதியை சேர்ந்த கே. திலக்குமார என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி தற்போது மரணமடைந்துள்ளார்.

குறித்த மரணமடைந்தவர் 31 வயதான கொழும்பு ஆமர் வீதியை சேர்ந்த சுப்ரமணியம் நிரூபன்  என்பவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவராவார்.

மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right