யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டிக்குளி பாடசாலை மாணவி குமாரசாமி கிரிசாந்தியின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் பிற்பகல் 3 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

1996 ஆம் செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிரிசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதையின் பின் படுகொலை செய்ததாக நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.