பொது மக்களிடம் உதவியை நாடும் பொலிஸார்

Published By: Vishnu

08 Sep, 2021 | 02:19 PM
image

ஆகஸ்ட் மாதம் பேருவளை கடற்கரையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலின் முக்கிய சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸ்துறை பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

போதைப்பொருள் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபர் களுத்துறை சமிந்தா டாப்ரூ / களுத்துறை பாப் மார்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெற்கு கடற்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது சுமார் 290 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

இவற்றின் பெறுமதி சுமார் 2321 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டது. 

இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக 05 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடத்தலின் முக்கிய சந்தேக நபர் களுத்துறை பாப் மார்லி என தெரியவந்துள்ளது.

இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபரின் புகைப்படத்தை வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபர் குறித்த தகவல் தெரிந்தால் கீழ்க்கண்ட ஹாட்லைன் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கம்: 071 8592727 /0112 343333-4.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32