ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் அதன் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேண பீஜிங் தயாராகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7 அன்று பெயரிடப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பீஜிங் அங்கீகரிக்குமா என்று கேட்டபோதே இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

The US' spying all over the world is unacceptable: China's Foreign Ministry  - Global Times

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீனா மதிக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களை செவ்வாய்க்கிழமை பெயரிட்டனர்.

A gathering of tribal elders in Kabul in August being led by Khalil Haqqani, center, who was appointed acting minister of refugees.

இதினில் 2001 இல் வீழ்ச்சியடைந்த முந்தைய தலிபான் அரசாங்கத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றிய முல்லா ஹசன் அகுந்த் இடைக்காலப் பிரதமராகப் பெயரிடப்பட்டார். 

அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைக் கையாண்ட குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் துணைப் பிரதமராகப் நியமிக்கப்பட்டார்.

தலிபானின் முதல் தலைவர் முல்லா உமரின் மகன் முல்லா மொஹமட் யாகூப் பாதுகாப்பு அமைச்சராகவும், ஹக்கானி நெட்வொர்க்கின் நிறுவனர் மகன் சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெதாயத்துல்லா பத்ரி நிதி அமைச்சராக செயல்படுவார், அதே நேரத்தில் தோஹாவில் தலிபான் பேச்சுவார்த்தை நடத்திய அமீர்கான் முத்தாகி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் "புதிய இஸ்லாமிய அரசாங்கத்தின்" 33 உறுப்பினர்களைக் குறிப்பிட்டு, மீதமுள்ள பதவிகள் கவனமாக விவாதிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

எனினும் இந்த அரசாங்கத்தில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை பெயரிடப்பட்ட தலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குறித்து கவலைப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

தலிபான் பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா மற்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.