(எம்.எப்.எம்.பஸீர்)  

இணையத்தில் விளம்பரம் செய்து, தெஹிவளை - ஹில் வீதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை தெஹிவளை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது 5 வெளிநாட்டு பெண்கள் உள்ளிட்ட 7 பெண்களையும், விபச்சார நிலையத்தின் முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது | Virakesari.lk

 

சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக இந்த விபச்சார விடுதி நடாத்தி செல்லப்பட்டுள்ளதாகவும்  10 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபாவுக்கு இங்கு பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்ட முகாமையாளர் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிட்ட பொலிஸார் உள்நாட்டு பெண்கள் இருவரும் வெள்ளவத்தை மற்றும் பாணந்துரையைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

வெளிநாட்டு பெண்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து இந்த விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.