எம்.எம்.சில்வெஸ்டர்

டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தினேஷ் பிரியன்த மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்கு ஆகிய இருவருக்கும் இரண்டு கார்களை பரிசளித்துள்ளது ஜப்பானிலுள்ள ஸ்ரீ லங்கா ஓட்டோமொபைல் அசோசியேஷன்.

இலங்கை பரா ஒலிம்பிக்  குழுவினர் இலங்கை நோக்கி புறப்படுவதற்கு முன்பாக டோக்கியோ விமான நிலையத்தில் வைத்து ஜப்பானிலுள்ள ஸ்ரீ லங்கா ஓட்டோமொபைல் அசோசியேஷன் அதிகாரிகள் சந்தித்தனர்.

இதன்போது, உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்கு ஆகிய இருவருக்கும் ஜப்பானிலுள்ள ஸ்ரீ லங்கா ஓட்டோமொபைல் அசோசியேஷன் இரண்டு கார்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

அதற்கான மாதிரி படிவத்தை தினேஷ் மற்றும் துலான் ஆகிய இருவருக்கும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.

 

இன்று மாலை வேளையில் இலங்கைவரவுள்ள இலங்கை  பரா ஒலிம்பிக்  வீர, வீராங்கனை ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.