(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமான  நிலையில்  ஆரம்ப உரையை நிகழ்த்திய   மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன்    இலங்கை குறித்து  எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. 

இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் செய்திருந்த பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான  ஐக்கிய நாடுகளின் செயற்குழு   தமது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையிலும் அதற்கு இலங்கை பதிலளித்துள் சூழலிலும்  அது  தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் செய்ட் அல் ஹூசேன்  இன்று குறிப்பிடவில்லை.  

இன்றைய உரையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த  செய்ட் அல் ஹூசேன்  பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து  சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இலங்கை  தொடர்பில்  ஹூசேன்  எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.