(எம்.மனோசித்ரா)
டோக்கியோ பராஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்த விளையாட்டு வீரர்களுக்கு நிதியனுசரணை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2020 பராஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை தினேஷ் பிரியந்த ஹேரத், வெண்கலப் பதக்கத்தை சமித்த துலான் அதன் மூலம் தாய்நாட்டுக்கு விசேட வெற்றியை ஈட்டித்தந்துள்ளனர்.
1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள தேசிய விளையாட்டுக்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பணப் பரிசுகளை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேற்படி வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இருவருக்கும் தேசிய விளையாட்டுக்கள் சபையின் பரிந்துரைக்கமைய பணப்பரிசு வழங்குவதற்காக விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM