ஊவா மாகாணத்தில் இதுவரை 408 கொரோனா மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

07 Sep, 2021 | 04:26 PM
image

பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்தில், கோவிட்19 தொற்றினால், சிகிச்சைகள் பலனின்றி ஆரம்பம் முதல் இது வரையிலான 7.9.2021 காலப்பகுதியில் 408 பேர் உயிரிழந்துள்ளதாக ஊவா சுகாதார சேவை பணிப்பகத்தினர் விடுத்துள்ள கோவிட் 19 தொற்று விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களில் பதுளை மாவட்டத்தில் 304 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 104 பேருமாக மொத்த 408 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பிரதேச சுகாதாரப்பிரிவிலேயே 45 பேர் என்ற அதிக மரணங்களும் மொனராகலை மாவட்டத்தில் படல்கும்பரை பிரதேச சுகாதாரப்பிரிவிலேயே 19 என்ற அதிக மரணங்களும் நிகழ்ந்துள்ளன. 

மேலும் பதுளை மாவட்டத்தில் பதுளை பிரதேச சுகாதாரப் பிரிவிலேயே 2969 என்ற வகையில் கோவிட் 19 தொற்றளர்களின் அதிகரிப்புக்கள் காணப்படுகின்றன. மொனராகலை மாவட்டத்தில் , மொனராகலை சுகாதாரப்பரிவில் 2500 என்ற வகையில் கோவிட்19 தொற்றாளர்களில் அதிகரிப்புக்கள் காணப்படுகின்றன.

பதுளை மாவட்டம்

பதுளை  - 2969 - தொற்றாளர்கள், உயிரிழப்புகள் - 43 பேர்

பண்டாரவளை  - 1740 - தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள்  -  35 பேர்

எல்ல  - 1079 - தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 07 பேர்

கிராந்துருகோட்டை - 1310 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் -16பேர்

ஹல்துமுள்ளை  - 922 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 12பேர்

ஹாலி – எல   - 1575 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 35 பேர்

ஹப்புத்தளை - 1391 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 22 பேர்

கந்தகெட்டிய - 620 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள்  -02 பேர்

லுணுகலை  - 731 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 11 பேர்

மகியங்கனை  - 1698 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 16 பேர்

மீகாகிவுல  - 437 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 07 பேர்

பசறை  -1329 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் -19 பேர்

ரிதிமாளியத்த  - 1680  தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள் - 07 பேர்

சொரணாதொட்டை – 407  தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் -4 பேர்

ஊவா பரனகம - 1167 தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள் 23 பேர்

வெலிமடை  1960 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் 45பேர் என்ற வகையில்

304 மொத்த மரணங்களும், 21 ஆயிரத்து நூற்று பதினைந்து பேர் (21115) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டம்

மொனராகலை -2500 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் 11 பேர்

சியாம்பலாண்டுவை -1455 – தொற்றளார்கள், உயிரிழப்புக்கள் -06 பேர்

மடுல்ல  - 1115  தொற்றாளர்கள் ,உயிரிழப்புக்கள் -05பேர்

மெதகம 1271 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 05 பேர்

பிபிலை 1581 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 16 பேர்

படல்கும்பரை 1096 தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள்- 19 பேர்

புத்தலை 1692 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 14 பேர்

வெள்ளவாயா 1926 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 09 பேர்

தனமல்விலை 427 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 02 பேர்

செலனகலை 1124 தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள் - 14 பேர்

கதிர்காமம் 695 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் 03 பேர் என்ற வகையில், 104 மரணங்களும், 14 ஆயிரத்து எண்ணூற்றுஎன்பத்திரண்டு பேர் (14882) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இதனடிப்படையில், ஊவா மாகாணத்தில் 408 மரணங்களும், 35 ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூற்று ஏழு பேர் ( 35997 ) கோவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34