அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஆபத்தில் உள்ள ஆப்கானியர்களை காபூலில் இருந்து பாதுகாப்பாக பட்டாய விமானங்களில் மூலம் வெளியேற்றுவதற்காக அமெரிக்கா தலிபான்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
இந்த தகவலை கட்டாரின் உயர் இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டு செய்தி மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான் குழுவுடன் அமெரிக்கா இராஜதந்திரம் செய்து வருவதாகவும், பயண ஆவணங்களைக் கொண்ட மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து சுதந்திரமாக வெளியேற அனுமதிப்பதாக வொஷிங்டனிடம் தலிபான் அதிகாரிகள் கூறியதாகவும் பிளிங்கன் கூறினார்.
ஆப்கானிஸ்தான் தலைநகரிலிருந்து கூடுதல் பட்டய விமானங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக சமீபத்திய மணிநேரங்களில் அமெரிக்கா தலிபான்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
உரிய பயண ஆவணங்களுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அனைவருக்கும் தலிபான்கள் பாதுகாப்பான வழியை உறுதி செய்வதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறினார்.