(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கிழக்கு மாகாணத்திலிருந்து மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் ஒருவருக்கும், மொட்டு கட்சி எம்.பி.க்கும் இதில் தொடர்புள்ளது. 

கிழக்கு மாகாண ஆளுநரே மணல் ஏற்றுமதிக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா. சாணக்கியன்   குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தின் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூற்றை  முன்வைக்கையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டினார்.