முல்லைத்தீவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Published By: Digital Desk 4

07 Sep, 2021 | 03:50 PM
image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் சுகவீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (07) மரணமடைந்தனர்.

புதுக்குடியிருப்பு மேற்கு மற்றும் தேவிபுரம் பகுதியை சேர்ந்த 42, 84 வயதுடைய இருவரே இவ்வாறு  மரணமடைந்துள்ளவர்களாவர். குறித்த நபர்களுக்கு வேறு எவ்வித நோய்களும் அற்ற நிலையிலே மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை நேற்றையதினம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்றையதினம் இடம்பெற்ற இரண்டு மரணங்களுடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 13 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46