ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத் தரவுகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று காலை 10.38 மணியளவில் 2.4 ரிச்டெர் அளவில் பதிவாகியுள்ளது.

எனினும் இதனால் சேதம் எதுவும் பதிவாகவில்ல‍ை என்று ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

தற்போதைய நடுக்கம் மற்றும் அண்மையில் உணரப்பட்ட சிறிய நடுக்கம் பற்றிய விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.