சுகாதாரம் , பொருளாதாரம் என அனைத்து துறைகளையும் குறுகிய காலத்திற்குள் தலைகீழாக புரட்டிப் போட்ட கொவிட்-19 வைரஸ் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் நிலைமாறாமல் பாதிப்புக்களை தொடரச் செய்து கொண்டிருக்கிறது.
இதனால் நிரந்த தொழில் புரிந்த பல இலட்சக்கணக்கானோர் கூட இன்று தம் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தையும் தொலைத்து நிற்கின்றனர்.
மாதாந்தம் வருமானத்தைப் பெற்று ஓரளவிற்கு வாழ்வை சுமூகமாக கொண்டு சென்றோருக்கே இந்நிலை என்றால் , நாளாந்தம் வருவாய் தேடி உழைத்த மக்கள் நிலை என்னவாகியிருக்கும் என்பதை அனைவராலும் உணர முடியும்.
இது குறித்து மரக்கறி வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபா தற்பொழுது வரை எங்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் உணவிற்கு கூட எனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.
எனது குடும்பத்தில் 5 பேர் இருக்கின்றோம். எனது வருமானம் தற்பொழுது போதுமானதாக இல்லை.....என தெரிவித்தார்.
தற்போது மக்களுக்கும் வருமானம் இன்மையால் பெரும்பாலானோர் கடனுக்கு மரக்கறிகளை கொள்வனவு செய்வதாகவும் , இதனால் தாமும் நஷ்டமடைவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
குறித்த மரக்கறி வியாபாரியைப் போன்று, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பல்வேறு வியாபாரிகள் தொடர்பிலும் உரிய தரப்பினர் அவதானம் செலுத்தி அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
நேரடி கள ஆய்வு : மனோசித்ரா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM