தலிபான்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே அரசை அறிவிப்பதிலுள்ள தாமதம்

By Gayathri

07 Sep, 2021 | 01:31 PM
image

வெள்ளிக்கிழமை இரவு காபூலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது இரண்டு மூத்த தலிபான் தலைவர்களான  இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி இடையே நடந்த அதிகாரப் போட்டி என்று கூறப்படுகின்றது.

பஞ்ச்ஷீர் நிலைமையை எப்படி தீர்ப்பது என்பதில் தலிபான் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆர்எஃப்) தலிபான்களுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறது.

அனஸ் ஹக்கானி மற்றும் முல்லா பரதர் ஆகியோருக்கு விசுவாசமான படைகள் நிலைமையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் கருத்து வேறுபாடு காரணமாக மோதலில் ஈடுப்பட்டன. 

முல்லா பரதர் காயமடைந்து பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை பன்ஜ்ஷிர் அப்சர்வர் தனது ட்வீட் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் கெரில்லா தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ் தலைமையிலான தேசிய எதிர்ப்பு முன்னணியின் கோட்டையாக பன்ஜ்ஷிர் உள்ளது.

ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய  போதிலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பதற்கான அறிவிப்பை தாமதப்படுத்தி வருகின்றனர். 

அதிகார பகிர்வு தொடர்பாக தலிபான்களுக்கும் ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக அரசு அமைப்பது தாமதமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டை தலிபான்களில் விரிசலைக் குறிக்கிறது. முன்னதாக ஹைபத்துல்லா அகுந்த்ஸடா கந்தஹாரை மையமாகக் கொண்டே இஸ்லாமிய எமிரேட்ஸ் அரசு உருவாகும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் ஹக்கானி மற்றும் பல தலிபான் பிரிவுகள் அவரைத் தலைவராக ஏற்கவில்லை.

மேலும், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத்  தனது பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை காபூலுக்கு  சென்றிருந்தார். ஹமீத்தின் அவசர வருகையால் தலிபான்கள் வெறும் ஐஎஸ்ஐ கைப்பாவை என்பதை உறுதிப்படுத்துகிறது.

(ஏ.என்.ஐ)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04