திருகோணமலை உப்புவெளி பகுதியில் வைத்து காணமல் போனதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களும் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து கண்டபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவர்களை தேடும் பணியில் 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், இவர்கள் கண்டுபிடிக்கப்ட்டுள்ளனர்.

 9 மற்றும் 11 வயதான சிறுவர்களே நேற்று (12) காணாமல் போயிருந்தனர்.