எம்.எம்.சில்வெஸ்டர்
டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட இலங்கை பரா மெய்வல்லுநர் குழாத்தினர் இன்று மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். விமான நிலையத்தில் இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஒலிம்பிக் அல்லது பரா ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை தேசிய கீதத்தை முதன்முறையாக இசைக்கச் செய்து, இலங்கையின் பெயரை மிளிரச்செய்த தினேஷ் பிரியன்தவுக்கு கெளரவம் செலுத்தி வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் விமான நிலையத்துக்கு செல்லவுள்ளார்.
இந்த வரவேற்பு நிகழ்வுக்கு அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன்,விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமென்டின் உயர் அதிகாரிகள் சிலரும், பரா ஒலிம்பிக் தெரிவுக்குழு உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தினேஷ் பிரியன்த உள்ளிட்ட குழுவினரை சுகாதார வழிகாட்டல்களுடன் நடைபெறும் இந்த வரவேற்பு நிகழ்வை விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகப் பிரிவு ஆவணப்படுத்தவுள்ளது. இந்த நிகழ்வை அடுத்து, பரா மெய்வல்லுநர் குழாத்தினர் நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலிலர் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைப்படவுள்ளனர்.
இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர், தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு மற்றும் பயிற்றுநரான பிரதீப் நிஷாந்த ஆகியோரை கெளரவிக்கும் வைபவம் நடைபெறும் என அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்தவுக்கு 5 கோடி ரூபா பணப்பரிசும், வெண்கலப் பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்குவுக்கு 2 கோடி ரூபா பணப்பரிசும் பயிற்றுநரான பிரதீப் நிஷாந்தவுக்கு ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பணப்பரிசும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM