கொரோனாவை பரப்பிய 28 வயது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை

By T. Saranya

07 Sep, 2021 | 12:21 PM
image

வியட்நாமில் கடுமையான கொரோனா தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காகவும், பொதுமக்களுக்கு  வைரஸை பரப்பியதற்காகவும் 28 வயது நபர் ஒருவருக்கு  ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் விதிமுறைகளை மீறி பலருக்கும் வைரஸை பரப்பியதாகத் தெரிகிறது.

அவர்  அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி ஹோ சி மின் நகரத்தில் இருந்து தனது சொந்த மாகாணமான கா மாவுக்கு சென்றுள்ளார்.

அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் 21 நாள் தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி பயணம் செய்துள்ளார்.

லீ வான் ட்ரையின் இந்த பொறுப்பற்ற தன்மை காரணமாக சுமார் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

நீதிபதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அந்த நபரால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த நபருக்கு இது சரியான தண்டனை என அனைவரும் கூறி வருகின்றனர்.

வியட்நாம் பரிசோதனைகள், தொடர்பு தடமறிதல், இறுக்கமான எல்லை கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் என்பவற்றால் உலகில் கொரோனா வைரஸ் வெற்றிக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு புதிய தொற்றுநோய்கள் அந்த சாதனையை கெடுத்துவிட்டன.

வியட்நாமில் கொரோனா விதிகளை மீறியதற்காக இதுபோல் பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு விதிகளை மீறிய ஹாய் டுவோங்கில் உள்ள 32 வயதான ஒருவருக்கு ஜூலை மாதத்தில் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதே குற்றச்சாட்டிற்காக மார்ச் மாதத்தில் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமான உதவியாளர் இரண்டு வருட இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 2 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right