ஹெயிட்டியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,248 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவனம் திங்களன்று மீட்புப் பணிகளை முடித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,248 பேர் உயிரிழந்துள்ளனர். 12,763 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 329 பேர் காணாமல் போயுள்ளனர் “ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அவை நிலநடுக்கத்தால் ஏற்பட்டவை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

ஹெய்ட்டியை ஆகஸ்ட் 14 ஆம் திகதி 7.2 ரிச்டர் அளவில்  நிலநடுக்கம் தாக்கியதையடுத்து சிறிது நேரத்தில் வெப்பமண்டல புயல் வீசியது.

அப்போதிருந்து, 900 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 400 நிலநடுக்கங்கள் ரிச்டர் அளவுகோலில் 3 க்கும் மேல் பதிவாகியுள்ளன.

இந்த  பேரழிவால் 53,000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தும், 83,000 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தும் குறைந்தது 25,000 பேர் இதுவரை வீடு திரும்ப முடியாத நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.