சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 665 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 69 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம்  66,668 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவை தவிர சோதனைகளின் பின்னர் 541 வாகனங்களில் பயணித்த 778 பேர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதே போன்று 632 வாகனங்களில் பயணித்த 987 பேர் மேல் மாகாணத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.