மக்களின் உரிமைகளை அடக்கும் எந்த விடயங்களும் அவசரகால சட்ட விதிகளில் இல்லை - அலிசப்ரி

Published By: Digital Desk 3

06 Sep, 2021 | 10:21 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல் மக்களின் அடிப்படை உரிமைகளை அடக்கும் விடயங்கள் எதுவும் அமுல்படுத்தி இருக்கும் அவசரகால சட்டத்தில் இல்லை. மாறாக அத்தியாவசிய உணவுப்பொருட்களை மறைத்து வைக்காமல் விநியோகிக்கும் நடவடிக்கையே இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அறிவிப்பின் முதலாவது பகுதியில்  பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் அவற்றை கைப்பற்றி நியாயமான விலைக்கு விற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாவனையாளர்கள் தான் நன்மை அடைவர். இதனை பயன்படுத்தி எவ்வாறு வேறு நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

நுகர்வோர் அதிகார சபையின் வாயிலாக இவற்றை செய்ய முடியாதா என கேட்கின்றனர். ஆனால் உத்தரவாத விலையை நிர்ணயித்து அதிக விலைக்கு விற்றால் வழக்கு தொடர மட்டுமே இதனால் முடியும். ஆனால் நடைமுறையில் இருக்கும்  இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. 

நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது. 82 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை வியாபாரிகள் பயன்படுத்தி மக்களை சூறையாடுகின்றனர். இதனை கட்டுப்படுத்தவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15