மின்சார வேலியில் சிக்கி யானை பலி : ஒருவர் கைது

By Gayathri

06 Sep, 2021 | 07:33 PM
image

(எம்.மனோசித்ரா)

தணமல்வில பொலிஸ் பிரிவில் கவவெல்கல பாதுகாக்கப்பட்ட வலயத்திற்குள் காணப்படும் வாவியொன்றுக்கு அருகில் அநாவசியமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானையொன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 18 வயதுடைய யானையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதற்கமைய கல்கொட்டுகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 61 வயதுடைய கலவெல்கல, சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right