பஞ்ச்ஷீரில் மோதல்கள் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூலில் முதன்மையாக ஆப்கானிஸ்தான் மாகாணத்திற்கு எதிரான தலிபான்களின் போரை மேற்பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் புலனாய்வு தலைவர் காபூலில் என்ன செய்கிறார் என்று வடகிழக்கு மாகாணமான பஞ்ச்ஷிரில் உள்ள எதிர்ப்புப் படைகளின் தலைவர் அஹ்மத் மசூத் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்நிலையானது ஆப்கான் விவகாரங்களில் பாகிஸ்தானின் தலையீட்டின் தெளிவான வெளிப்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தலையிடுவதற்கான தெளிவான அறிகுறி இதுவல்லவா? காபூலில் ஐ.எஸ்.ஐ தலைவர் ஏன் இருக்கிறார்? அவர் அங்கு என்ன செய்கிறார்? எங்களை எந்த விதத்திலும் ஆட்சி செய்ய வெளிநாட்டு கைப்பாவைகளை மனுமதிக்க இயலாது. ஐ.எஸ்.ஐ தலைவரின் காபூல் வருகையின் உண்மையான காரணத்தை கேள்விக்குள்ளாக்கி தனது டுவிட்டரில் அஹ்மத் மசூத் பதிவேற்றியுள்ளார்.

தலிபான் தலைவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானியர்கள் அல்ல. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர். துரதிர்ஷ்டவசமாக, இந்த வெளிநாட்டவர்கள் இப்போது முழு ஆப்கானிஸ்தான் நாட்டையும் ஆட்சி செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.