புகழ்பெற்ற சூஃபி துறவி ஹஸ்ரத் சூன் ஷாவின் 500 வது  தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. ஜம்மு - காஷ்மீரில்அனந்த்நாக் மாவட்டத்தின் உம்ராங்சோ பகுதியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பல பக்தர்கள் கொவிட் -19 நெறிமுறைகளை பின்பற்றி அனுஷ்டிப்புகளில் ஈடுப்பட்டனர்.

இதற்கான விசேட நிகழ்வுகள்அனந்த்நாக் மாவட்டத்தின் உம்ராங்சோ கிராமத்தில் அமைந்துள்ள சூஃபி துறவி ஹஸ்ரத் சூன் ஷாவின் சமாதியில் நேற்று நடந்தது.

இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி  சூஃபி துறவி ஹஸ்ரத் சூன் ஷா பிரபல சூஃபி துறவி பாபா ஹைதர் ரெஷியின் தோழர்களில் ஒருவராவார்.

பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரும் சன்னதியில் வணங்கி சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஹஸ்ரத் சூன் ஷாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த உர்ஸ் பண்டிகையை நாங்கள் கொண்டாடுகிறோம்.

அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் மற்றும் அனைத்து தீமைகளிலிருந்தும் எம்மை பாதுகாத்து வருகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த ஆண்டு  கொவிட் ஏற்படுத்திய முடக்கத்தால் கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டதாக பக்தர்கள் குறிப்பிட்டனர்.

(ஏ.என்.ஐ)