நடிகையாக அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கரின் வாரிசு

Published By: Digital Desk 4

06 Sep, 2021 | 04:58 PM
image

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி ஷங்கர் தம்பதியின் இளைய மகளான அதிதி சங்கர், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கும் 'விருமன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைபடம் 'விருமன்'. 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்', 'தேவராட்டம்', 'புலிகுத்திப் பாண்டி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இப்படத்தை இயக்குகிறார். 

இதில் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் நடிக்கிறார்.

இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் மூத்த நடிகர் ராஜ்கிரண் பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

'விருமன்' படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் மூத்த நடிகர் சிவகுமார், திருமதி லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் ஷங்கர், திருமதி ஈஸ்வரி சங்கர், அவரது மகளும் புதுமுக நடிகையுமான அதிதி ஷங்கர், பிருந்தா சிவக்குமார், தயாரிப்பாளர்கள் எஸ் தாணு, ஞானவேல்ராஜா, எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, பாண்டிராஜ், முத்தையா, ஜெகன், த செ ஞானவேல், இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சக்தி பிலிம்ஸ் சக்திவேல் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் குழுவினர்கள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றினர். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 18ஆம் திகதி முதல் தேனி நகரில் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை கிராமிய பின்னணியில் திரைக்கதையாக்கி கொமர்ஷல் அம்சங்களுடன் படைப்பை அளித்துவரும் இயக்குனர் முத்தையா - கார்த்தி கூட்டணியில் கொம்பன் படத்தை தொடர்ந்து உருவாகும் 'விருமன்' படத்திற்கு அதன் தொடக்க விழாவின் போதே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. மேலும் இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வாரிசு நடிகையாக அறிமுகமாவதால் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30
news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39