கத்திக்குத்தை மேற்கொண்ட  இலங்கையர் : நியூஸிலாந்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அரசாங்கம் தெரிவிப்பு

Published By: Gayathri

06 Sep, 2021 | 02:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நியூஸிலாந்தில் பல்பொருள் அங்காடியில் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய இலங்கை பிரஜை தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை நடவடிக்கைளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். 

அடிப்படைவாத தாக்குதல்கள் எவ்வழியிலும் முன்னெடுக்கப்படலாம் என்பதை உலக நாடுகள் தற்போது அறிந்துக்கொண்டுள்ளன.  

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து நீடித்துள்ளமையை பிற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதவேண்டும்.

விடுதலை புலிகள் அமைப்பின் மீள் எழுச்சி அனைத்து நாடுகளின் நிலையியல் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

அடிப்படைவாத தாக்குதல்கள் தென்னாசிய வலய நாடுகளில் மாத்திமல்ல முழு உலகிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. 

கடந்த  வாரம் நியூஸிலாந்து நாட்டில் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44