பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோருக்கான விளக்கமறியல் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த வழக்கில் ஐந்தாவது சந்தேக நபராக ரிசாத் பதியுதீன் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரிஷாத் பதியூதீனின் மைத்துனர் மற்றும் உயிரிழந்த சிறுமியை கொழும்பில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்துக்கு பணியில் அமர்த்த உதவிபுரிந்த தரகர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இருவரின் சார்பாக தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு அடிப்படையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.