(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

 

குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த சடலம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.