இஸ்ரேலில் தலையொட்டி பிறந்த ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பிரிப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Twins after the separation surgery

இதனால் தலையின் பின்புறம் ஒட்டியிருந்த இரு பெண் குழந்கைளும் ஒருவரையொருவர் முதன் முதலாக பார்த்துக் கொண்டனர்.

பீர்ஷெபா நகரில் அமைந்துள்ள சொரோகா மருத்துவ மையத்தில் கடந்தவாரம் 12 மணிநேரம் இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து டஜன் கணக்கான நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையினை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத இரு சிறுமிகள் நன்றாக குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகளவில் 20 முறை மட்டுமே நடத்தப்பட்ட இத்தகைய அறுவை சிகிச்சை இஸ்ரேலில் செய்யப்படுவது இதுவே முதல் முறை.