புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3 மாத குழந்தை உட்பட 4 பேரை சுட்டுக் கொன்றதாக புளோரிடா ஷெரிப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

துப்பாக்கியால் சுட்டவர், முன்னாள் இராணுவ வீரர் என்றும், அவர் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் காவல்துறை மற்றும் பிரதிநிதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். 

துப்பாக்கிச் சூட்டில் ஏழு முறை சுடப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்று அதிகாரிகள் கூறினர்.

33 வயதான பிரையன் ரிலே என்ற நபரே கைதுசெய்யப்பட்டவர் ஆவார். அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னரும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார் என்று புளோரிடா ஷெரிப் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.