அரிசி, சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை : 3 மாதங்களுக்கு தேவையான சீனி கைவசமுள்ளது - அரசாங்கம்

Published By: Digital Desk 4

05 Sep, 2021 | 08:25 PM
image

(ஆர்.யசி) 

கொவிட் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், நாட்டில் சீனி மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். 

Articles Tagged Under: லசந்த அழகியவண்ண | Virakesari.lk

நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படவில்லை. எனினும் வியாபாரிகள் ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் தற்போதும் நாட்டில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளது.

மாதம் 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னே மக்களின் பாவனைக்கு தேவைப்படுகின்றது. ஆகவே அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு சீனி எம்மிடம் உள்ளது. 

நாளை மறுதினம் தொடக்கம் சகல மொத்த வியாபாரிகளுக்கும் சீனி கொள்வனவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல் அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒரு கிலோ சீனி 120/130 ரூபாய் என்ற நிர்ணயவிலையில் வழங்கப்படும்.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04