எம்.எஸ்.தீன் 

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றதொரு மாவட்டமாக அம்பாறைஉள்ளது. ஆயினும், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களினால் மாவட்ட அடிப்படையில் அனுபவிக்கக்கூடிய உரிமைகளை பெற்றுக் கொள்வதில் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள்.இம்மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 44 சதவீதமாக வாழ்கின்றார்கள். 

சிங்களவர்கள் சுமார் 39 சதவீதமாகவும், தமிழர்கள் சுமார் 17 சதவீதமாகவும்உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள போதிலும் இம்மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராகமுஸ்லிம் ஒருவரை நியமிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முதல் இதற்கு முதல் ஆட்சி செய்தஎந்த அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசுகின்ற சமூகம் பெரும்பான்மையாகவும்அம்பாறை மாவட்டத்தில் உள்ள போதிலும் பெரும்பான்மையைச் சேர்ந்தவர்களே அரசாங்க அதிபராகநியமனம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நிலப் பங்கீட்டில் கூட முஸ்லிம்கள் புபுறக்கணிப்படுகின்றார்கள்.முஸ்லிம்களின் காணிகள் பல்வேறு பெயர்களில் அரசாங்கத்தினால் சுவீகரிப்புச் செய்யப்பட்டுள்ளன.அவற்றில் பலவற்றிக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்று கடந்த காலங்களில் ஆட்சியாளர்களினால்வழங்கப்பட்ட உறுதிமொழிகள் கூட தற்போது வரைக்கும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-05#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.