(எம்.மனோசித்ரா)

மனித உரிமைகளுக்கு முக்கியத்துவமளித்து ஒன்றிணைந்து இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த வாரம் நியூசிலாந்தில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அந்நாட்டு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஊடாக நாம் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் கடந்த ஒன்றரை வருடங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே உள்ளக பொறிமுறைகளைப் பயன்படுத்தி மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்  எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,