வடக்கில் தடுப்பூசிக்கு தயங்கும் இளையோரும் அலட்சியப்படுத்தும் முதியோரும்

Published By: Digital Desk 2

05 Sep, 2021 | 03:17 PM
image

ஆர்.ராம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாண்டவம் கோரமடைந்தே செல்கின்றமை பகிரங்கமானது. இதனால் தான் முடக்கல் நிலைக்கு முரண்டுபிடித்த அரசாங்கம் கூட எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் முழுமையான முடக்கலை நீடிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளது. கூடவே, உயிராபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடன் தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டினையும் வேகப்படுத்தியுள்ளது. 

தடுப்பூசியை வழங்குவது மட்டுமே கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்று அரசாங்கம் கருதுகின்றது. அதுபற்றிய வாதப்பிரதிவாதங்கள் பல உள்ளன. எவ்வாறாயினும், கடந்த வாரத்தில் மட்டும் நாட்டில் 13சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது சர்வதேச ரீதியில் முதன் நிலையாக உள்ளதென்று 'ourworldindata ' என்ற இணைய தளத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன. 

“தற்போது 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 11.5மில்லியன்பேர் 30வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 76சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது” என்று கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிடுகின்றார். 

அதேநேரம், “18வயது முதல் 30வரையிலானவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 3.7பேர் வரையிலானவர்கள் இந்த வயதெல்லைக்குள் தடுப்பூசி பெற வேண்டியவர்களாக உள்ளார்கள். அதற்குரிய விரைந்த பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12முதல் 18வயதான பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வயதெல்லைக்குள் நாடளாவிய ரீதியில் 3.5மில்லியன் பேர் உள்ளனர்” என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.  

இலங்கையில் கொவிஷீல்ட், சினோபார்ம், ஸ்புட்னிக் வீ, பைசர், மொடோனா ஆகிய ஐந்துவகை தடுப்பூசிகள் வழங்;கப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றை வழங்குவதற்கான மக்கள் குழுவினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதில் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஏனென்றால் இதில் வாக்குவங்கி அரசியலும் செல்வாக்குச் செலுத்தாமலில்லை.

குறிப்பாக, செயற்றிறனில் சிறந்த தடுப்பூசியாக இலங்கையர்கள் நம்பிக்கொண்டிருக்கும் பைசர், ஆபத்துக்கள் நிறைந்த கரையோர மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதுபோன்று தான், கொவிஷீட்டுக்கும் காரணம் கூறப்பட்டு வழங்கப்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-09-05#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49