இலங்கை - இத்தாலி நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவு குறித்து பேச்சு

Published By: Gayathri

05 Sep, 2021 | 03:05 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கும் இத்தாலிக்குமிடையில் வர்த்தகம், முதலீட்டு உறவுகள், சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குவது குறித்து இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்தும் வகைகயிலான இலங்கை மற்றும் இத்தாலிக்கு இடையேயான வலுவான, நட்புறவான, பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மையை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராட்டினார்.

வர்த்தகம், முதலீட்டு உறவுகள், சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளினதும் பொருளாதார மற்றும் கலாச்சார செறிவூட்டலுக்கு இத்தாலியில் உள்ள இலங்கைச் சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பையும், கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் இலங்கைக்கும் ரோமுக்கும் இடையே நிலவிய வலுவான இராஜதந்திர உறவுகளின் வரலாற்றையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து இத்தாலி தூதுவருக்கு அமைச்சர் விளக்கியதுடன், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் நெருக்கமான உரையாடலையும் ஒத்துழைப்பையும் தொடர்வதற்கும் இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02