வெற்றிலைக்கேணி, ஆளியவளை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் சுமார் 277 கிலோ மற்றும் 400 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஆளியவளை கடல் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கரையை நோக்கி சென்றதை கண்டு, வடக்கு கடற்படையினர் இந்த சிறப்பு நடவடிக்கையை இன்று காலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த டிங்கி படகில் 05 சாக்குகளில் இந்த கேரள கஞ்சா அளவுகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் மொத்த பெறுமதி 68 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படையினரின் இந்த விசேட நடவடிக்கை கொவிட்-19 தடுப்பு  நெறிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை தீ வைத்து அழிக்கப்பட்டது.

இதேவேளை கற்பிட்டி பகுதியில் இன்று காலை கடற்படையினர் நடத்திய மற்றொரு சிறப்பு நடவடிக்கையில் சுமார் 1026 கிலோ கிராம்  உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைதுசெய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய டிங்கு படகையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 29 முதல் 41 வயதுக்கு உட்பட்ட கற்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகு ஆகியவை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.