பண்டாரவளை பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணிப்பாளர் சபையினரை உடனடியாக அகற்றக்கோரி சங்க நிறைவேற்று உறுப்பினர்கள் மூவர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று (13) பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண கூட்டுறவு திணைக்களத்திற்கு முன்பாக இடம் பெற்றுவருகின்றது.

ஊவா மாகாண கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க நிறைவேற்று உத்தியோகஸ்தர்கள் மூவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பணிப்பாளர் சபை கலைத்து, புதிய பணிப்பாளர் சபை உருவாக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.