மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் மல்யுத்த வீரரும், ஹெலிவூட் நடிகருமான ஜோன் சீனா.

சித்தார்த் சுக்லா செப்டம்பர் 2 ஆம் திகதி மாரடைப்பால் மும்பையில் காலமானார். 

சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அக்‌ஷய் குமார் உட்பட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

இந் நிலையில் செப்டம்பர் 4 அன்று மல்யுத்த வீரர் ஜோன் சீனா சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தைப் இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.

தற்சமயம் இந்தப் பதிவு வைரலாகியுள்ளது. 

முன்னதாக, 2020 ஆம் ஆண்டில் ஜோன் சீனா, பிக் பாஸ் 13 இணை போட்டியாளருமான அசிம் ரியாஸின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.