ஐ.நா.தீர்மானத்தை புறக்கணிக்கும் இலங்கை அரசின் பொறுப்புக்கூறாமை தொடர்கிறது - ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு கடிதம்

05 Sep, 2021 | 07:29 AM
image

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்ட 46/1தீர்மானத்தினை கடந்த ஆறு மாதங்களில் இலங்கை அரசாங்கம் புறக்கணித்தே செயற்பட்டவருவதோடு அதன் பொறுப்புக்கூறாமைச் செயற்பாடுகள் தொடர்கின்றன. 

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி போர் நிறைவடைந்து 12 ஆண்டுகளாகின்றபோது நிலைநாட்டப்படவில்லை என்பதை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியத் தளத்தில் செயற்படும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டிணைந்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இக்கடிதத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மற்றும் தமிழீழ விடுதலை இயகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அக்கடிதத்தில், தொடர்ந்து நீடிக்கும் பாகுபாடுகள், நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள பௌத்த மயமாக்கல், தொல்பொருளின் பெயரால், அபிவிருத்தியின் பெயரால் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புக்கள், வனவளத்திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் நிறுவனங்கள் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புக்கள், அரச வேலைவாய்ப்புக்களில் காண்பிக்கப்படும் பாகுபாடுகள், திட்மிட்டு தடுக்கப்படும் நினைவேந்தல் உரிமைகள், காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்திற்கு படையதிகாரிகள் நியமிக்கப்படுதல், காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றி தேடவேண்டியதில்லை என்று ஜனாதிபதிகோட்டாபய தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து, சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர் யுவதிகள்ரூபவ் போட்டங்களில் கலந்து கொள்பவர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுதல், குற்றப்புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அச்சுறுத்தல்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுதல், மீளக்குடியேற்றாமை, நீடிக்கும் அகதி முகாம் வாழ்க்கை உள்ளிட்ட விடயங்கள் பல்வேறு உதாரணங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், இழைக்கப்பட்ட குற்றங்களின் சாட்சிகளாக உள்ளவர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுதல் பற்றியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் 2017ஆம் ஆண்டு ஐ.நாவுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை படைமுகாம்களில் பாலியல் துஷ்பிரயோக முகாம்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, 2013இல் வடக்கு கிழக்கில் 90ஆயிரம் பெண்தலைமைத்துவங்கள் இருக்கின்றமை தொடர்பாக பிரித்தானிய பொதுநலவாய அலுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் அமெரிக்க சிந்தனைக்கூடமான ஒக்லாந்து நிறுவனம் குறிப்பிட்டதைப்போன்று, இராணுவமயமாக்கல் மற்றும் 23ஆயிரம் பேர் வரையில் மீளக் குடியேற்றபடாதிருக்கின்றமை ஐ.நா.வலிந்து காணாமலாக்கப்பட்ட செயலணியின் தகவல்களின் பிரகாரம் இலங்கை காணாமலாக்கப்படுவோர் தொடர்பான பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளமை ஆகியனவும் அக்கடித்தில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்மையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிடவும் அக்கடிதத்தில் குறிப்பிட்ட சில முக்கிய விடங்கள் வருமாறு,

பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிப்பு

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளமையால் 617ஏக்கர்கள் பொதுமக்களுக்கு

சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை, காரைநகரில் 50 ஏக்கர் காணிகள் அபகரிக்க முயற்சித்தமை, மன்னார் நானானாட்டானில் 4000 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை

மட்டக்களப்பு செங்கலடியில் மாவத்தமனை நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றமை, 

கொக்கட்டிச்சோலையில் 1500 ஏக்கர்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு படையினருக்கு பகிர்ந்தளிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளமை.

தொல்பொருள்

ஜனாதிபதியின் அதிகாரத்தல் கிழக்கு மாகாண தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக செயலணி அமைக்கப்பட்டுள்ளமை, அதில் பெரும்பான்மை பௌத்தசிங்கள பிரதிநிதிகளும், படை அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளமை, நிலாவரைப் பகுதியில் உள்ள தென்மம் வாய்ந்த கிணற்றை ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்தமை.

நினைவேந்தல் உரிமை

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மனிதப் பேரவலத்தினை மே 18 ஆம் திகதி நினைவு கூருவதற்கு இடையுறுகள் தொடர்ச்சியாக அளிக்கப்படுகின்றமை மற்றும் அதில் பங்கேற்பவர்கள் விசாரணைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அழைக்கப்படுகின்றமை.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜுலை கலவரங்களின்போது உயிரிழந்தவர்களை நினைவு கூருதல், வெலிக்கடை படுககொலைகளில் உயிரிழந்தவர்களை நினைவு கூருதல் உள்ளிட்டவற்றுக்கு திட்டமிட்டு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றமை. இந்நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத, தீவிரவாத தடுப்பு பிரிவர் ஊடாக விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றமை.

அரச நிருவகத்தில் பாகுபாடு

பெரும்பான்மை தமிழ் பேசும் வடக்கு மாகாணத்திற்கான பிரதம செயலாளராக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினையும் மீறியும் பெரும்பான்மையின உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளமைரூபவ் பொதுநிருவாக மற்றும் ஏனைய அரச நியமனங்களில் தமிழ் உத்தியோகத்தர்கள் ஒதுக்கப்படுகின்றமை.

காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலம்

காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்திற்கு படைகளின் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமையும் காணாமலாக்கப்பட்டவர்களை தேடவேண்டாம் என்று ஜனாதிபதி கூறியதாக நீதி அமைச்சர் கடந்த காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய சர்வதேச தினத்தன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அறிவித்துள்ளமை.

பேரணிகளில் ஈடுபடுவோர்

தமிழ் மக்கள் மீது செய்யப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை கோரி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் எழுச்சிப்பேரணியில் ஈடுபட்டவர்களை விசாரணைகளுக்காக தொடர்ச்சியாக அழைத்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கின்றதோடு, சாதாரண நபர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்குகின்றமை, இவ்விதமாக சுதந்திரமாக கருத்துதெரிவிப்பதை தடுத்துதல், நடமாடுவதை தடுத்தல்ரூபவ் நீதிக்கோரிக்கைகளை நிராகரித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளை கடந்த ஆறுமாதங்கள் ஆட்சியில் உள்ள அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. 

ஆகவே இந்த விடயங்களில் தாங்கள்(உயர்ஸ்தானிகர்) கரிசணைகளைக் கொண்டு இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை வெளிப்படுத்துமாறு கோருகின்றோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08