பட்டதாரி பயிலுனர்களை சேவையில் நிரந்தரமாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை

Published By: Digital Desk 3

04 Sep, 2021 | 08:39 PM
image

கிழக்கு மாகாணத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளிவ்.ஜீ.திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதிப்பிரதம செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,

ஒரு வருட பயிலுனர் சேவையின் பின் நிரந்தர நியமனம் வழங்கப் படும் என்ற அடிப்படையிலேயே பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப் படுகின்றது. இதன் அடிப்படையில் 2019 இல் மத்திய அமைச்சு, திணைக்களங்களில் நியமனம் வழங்கப் பட்ட பட்டதாரி பயிலுனர்கள் ஏற்கனவே நிரந்தரமாக்கப் பட்டுள்ளனர்.  

எனினும் இதே காலப் பகுதியில் கிழக்கு மாகாண சபையில் இணைக்கப் பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இரண்டு வருடங்களாகியும் இதுவரை நிரந்தரமாக்கப் படவில்லை. இதனால் இந்தப் பட்டதாரிகள் தமக்குரிய வரப்பிரசாதங்களை இழந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய அமைச்சு திணைக்களங்களில் நிரந்தரமாக்கப் பட்டது போன்று கிழக்கு மாகாண சபையில் உள்ளீர்க்கப் பட்ட பட்டதாரி பயிலுனர்களையும் சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36