திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய நீர் பாவனையாளர் பிரிவுக்குட்பட்ட அனைக்கட்டு பகுதியில்  குடிநீர் குழாய் வெடித்துள்ளதால் ஆறு மாதகாலமாக குடி நீர் விரையமாக ஓடிக்கொண்டிருப்பதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு குழாய் வெடித்து நீர் வெளியேறுவதால் நீரின் வேகம் குறைந்துள்ளதாகவும்,இரவு பகலாக குடிநீர் வடி காண்களிலும் வீதிகளிலும் விரையமாகிக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் குழாய் வெடிப்பு தொடர்பாக கந்தளாய் பிராந்திய குடிநீர் பாவனைகள் அலுவலகத்தில் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இதனை அதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் இரண்டு தடவைகள் சென்று பார்வையிட்டுச் சென்றனர் தவிர நீர் விரையமாவாதை தடுக்க வில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆறு மாதங்களாக விரையமாகிக் கொண்டிருக்கும் குடி நீர் குழாயை சீர் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.