(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது.

நேற்று வெள்ளிக்கழமை 145 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 77 ஆண்களும் 68 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  9,951 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினம் பதிவான மரணங்கள் 145 இல் உயிரிழந்த 117 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அவர்களில் 55 ஆண்களும் 62 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

இந்நிலையில், 30 வயதிற்கு கீழ் பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்களுமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 19 ஆண்களும் 05 பெண்களுமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.