குழந்தைகளின் உடற்பருமனுக்கு காரணம் சிசேரியன்..!

Published By: Robert

13 Sep, 2016 | 11:05 AM
image

தற்போதுள்ள சூழலில் இயற்கையான முறையில் பிரசவம் நிகழாமல் சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சை முறையிலான பிரசவங்களே அதிகமாக நடைபெறுகின்றன. இந்நிலையில் இதுபோன்று சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் தான் குழந்தை பருவத்திலேயே உடற்பருமன் நோய்க்கு ஆளாகி வருவதாக அமெரிக்காவின் பொஸ்டனில் உள்ள ஹார்வார்ட் வைத்தியசாலை மற்றும் ஆய்வுமைய விஞ்ஞானிகள் ஓர் ஆய்வின் தெரிவித்திருக்கிறார்கள்.

மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தான் இதற்கு காரணம் என்றாலும், உடற்பருமன் நோயை தாக்கக்கூடிய வாய்ப்பு இத்தகைய சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் உடற்பருமனை உருவாக்கும் மைக்ரோபயோட்டா என்ற பாக்டிரியாக்கள் இயற்கையான முறையில் பிரசவம் நிகழும் போது அவை வெளியேறிவிடுவதாகவும், சிசேரியன் செய்யும் போது, அவை வெளியேறாமல் தோலின் வழியாக வெளியேற வேண்டிய சூழலுக்கும் ஆளாகின்றதாம். இதனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் இவ்வகையான பாக்டீரியாக்கள் குழந்தைகளின் உடலுக்குள் சென்று உடற்பருமனை அதிகப்படுத்துகிறது என்றும் சொல்கிறார்கள்.

இதனால் குழந்தை வயிற்றில் உண்டானதும் போதிய அளவு உடற்பயிற்சி, இயற்கையான முறையில் பிரசவம் நிகழவேண்டும் என்று மனதளவில் தயாராகுதல், சரிசமவிகித ஊட்டச்சத்துள்ள உணவு ஆகியவற்றைப் பின்பற்றினால் இதனை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

டொக்டர் எஸ் அசோக் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29