எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவின் கீழ், மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம் இருந்து சிறைச்சாலை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசி ஒன்றினை மீட்டிருந்தனர்.

 குறித்த தொலைபேசியை மெகசின் சிறையில் சேவையாற்றிய சிறை பாதுகாவலர் ஒருவர் வழங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அதனால் குறித்த சிறைக்காவலரை வவுனியா சிறைச்சாலைக்கு உடனடியாக இடமாற்றம் செய்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக்காவலரும் மற்றொரு காவலரும்,  கடந்த முதலாம் திகதி இரவு வேளையில், ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறையின் பக்கம் மேற்பார்வை பணிக்காக சென்றபோது, அவர் தொலைபேசியில் கதைப்பதை கண்டுள்ளதாகவும், பின்னர் அவர் அந்த தொலைபேசியை சிறை அறைக்கு வெளியே வீசிய நிலையில் அதனை கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.