மஸ்கெலியாவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கோடாவுடன் கைது

Published By: Digital Desk 4

03 Sep, 2021 | 07:58 PM
image

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து மிகவும் சூட்சமமான முறையில் பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட வந்த நபர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பு மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கவரவில பாடசாலை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதன் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கசிப்பு தயாரிப்பதற்காக தயார் நிலையில் இருந்து 60 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவும் மற்றும் 35 லீற்றர் கசிப்பு ஆகியன பொலிஸாரால் மீட்க்கபட்டுள்ளன.

நீண்ட காலமாக மிகவும் இரகசியமான முறையில் மிகப்பெரிய அளவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 08 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13