மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணினி அறை கதவை உடைத்து அங்கிருந்த  மூன்று கணினிகள், மவூஸ், கீபோட் என்பன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை நேற்று வியாழக்கிழமை (2) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை பூட்டப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை இரவு  இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலைக்கு அருகாமையிலுள்ள 22, 24 வயதுடைய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் இவர்களை விசரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.