அம்பாறை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலுள்ள பெலிவேரியன் கிராமத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவரின் வீட்டை இன்று வெள்ளிக்கிழமை (03) பிறபகல் பொலிஸார் முற்றுகையிட்டு 135 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த கைது செய்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பிற்பகல் 3 மணியளில் குறித்த கஞ்சா வியாபாரியின் வீட்டை விசேட புலனாய்வு பிரிவுடன் பொலிசாருடன் இணைந்து முற்றுகையிட்டனர்.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 135 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சாவியாபரியை கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.