ஊவா மாகாணத்தில் கொவிட்-19 தொற்றினால், சிகிச்சை பலனின்றி 388 பேர் உயிரிழந்துள்ளதாக, ஊவா மாகாண சுகாதார  சேவை  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதல்  இன்றுவரை (3.09.2021) வரையிலான காலப்பகுதியிலேயே, இந்த உயிரிழப்புக்கள்   பதிவாகியுள்ளன.

ஊவா மாகாணத்தில்  பதுளை மற்றும் மொனராகலை ஆகிய  இரு மாவட்டங்களே உள்ளன. 

இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் 290 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 20 ஆயிரத்து 106 பேர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொனராகலை மாவட்டத்தில்  98 பேர் கொவிட்  19 தொற்றினால்  உயரிழந்துள்ளதுடன், 14 ஆயிரத்து  55 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

  

பதுளை மாவட்டத்தில்  290பேர் உயிரிழந்துள்ளதுடன்  20 ஆயிரத்து நூற்று  ஆறுபேர் தொற்றாளர்களாகவும், மொனராகலை மாவட்டத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 ஆயிரத்து ஐம்பத்தைந்து பேர் தொற்றாளர்களாகவும் இருந்து வருவதாக, ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்  தெரிவித்தார். இதனை  ஊவா மாகாண மாவட்ட  அரச அதிபரும் உறுதிப்படுத்தியுள்ளார்.