2021 ஆம் ஆண்டுக்கான பி.பி.சி.யின் சிறந்த 'வனவிலங்கு புகைப்படக் கலைஞர்' பட்டியலில் இரண்டு இலங்கையர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

ககனா மெண்டிஸ் விக்கிரமசிங்க மற்றும் புத்திலினி டி சொய்சா

இயற்கை மீது தீராத ஆர்வம் கொண்டவர்களான புத்திலினி டி சொய்சா மற்றும் 10 வயது ககனா மெண்டிஸ் விக்கிரமசிங்க ஆகியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புத்திலினி டி சொய்சாவின் புகைப்படம், கென்யாவின் மாசாய் மாராவில் வெள்ளத்தால் கரைபுரண்ட தலேக் ஆற்றின் குறுக்கே நீந்தும் ஆண் சிறுத்தைகள் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ககனாவின் புகைப்படம்,  ரோஜா நிற வளையம் கொண்ட கிளிக் குஞ்சுகள் தங்கள் தந்தை உணவோடு திரும்பும்போது ஒரு மரத் துளைக்குள் இருந்து தலைதூக்கிப்  பார்ப்பதைக் காட்டுவதா அமைந்துள்ளது.

இந்த புகைப்படத்தை 10 வயது ககனா கொழும்பில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து எடுத்துள்ளார்.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் அறிவிக்கப்படுவார்கள்.